யாழ் நடேஸ்வரா கல்லூரி
( 3 ம் கட்டம் )
Times SriLanka FM இன் நான்கு வருட பூர்த்தியை முன்னிட்டு ,
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கான ஊடக செயலமர்வு ஒன்று நேற்று
14-08-2024 அன்று யாழ் நடேஸ்வரா கல்லூரியின் அதிபர் திரு கு. விமலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.அந்த வகையில், இளம் ஊடகவியலாளர்களை கண்டறிருந்து அவர்களுக்கான அங்கிகாரங்களை வழங்கும் நிகழ்வு வடமாகாண ஊடக அமையத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் முதலாவது நிகழ்வாக யாழ்ப்பாணம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் 2ம் நிகழ்வாக தெல்லிப்பழை பளை வீமன்காமம் மகாவித்தியாலயம் பாடசாலையிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Time Sri Lanka FM இன் ஊடக அனுசரணையில் நடைபெற்ற
இச் செயலமர்வானது வெற்றிகரமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் மாணவர்களின் செய்தி வாசிப்பு முறைமை பேச்சு முறைமை போன்ற பல விடயங்கள் கவனிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இந்த செயலமர்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. இந்த சான்றிதழ்களுக்கான நிதியுதவியினை இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தெல்லிப்பழை பிரிவினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment